283 கிலோ எடை கொண்ட பெண் உடல் எடையை எப்படி குறைக்கிறார்? வீடியோ வெளியானது

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த அதிக எடை கொண்ட பெண் தன்னுடைய எடையை குறைப்பதற்காக பயிற்சியை மேற்கொள்ளும் வீடியோவை அதன் பயிற்சியாளர் வெளியிட்டிருப்பது அதிக எடை கொண்ட பலருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் Mississippi பகுதியைச் சேர்ந்தவர் Leneathra Reed. 39 வயதான இவர் 626 பவுண்ட்ஸ்(283.949கிலோ எடை உள்ளார்).

இவருக்கு கென்லயன் என்ற 23 மாத மகன் உள்ளான். இந்நிலையில் இவர் தன்னுடைய மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், உடல் எடை அதிகரித்து கொண்டே செல்வதால், உடல் சம்பந்தமாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக கடந்த நவம்பர் மாதம் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவர் தற்போது வரை உடற்பயிற்சி மேற்கொண்டதான் மூலம் உடல் எடை குறைந்துள்ளதாக கூறி, அவருக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் அதன் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவை தற்போது 52,000 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 100,0000 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

அதில் ஒரு சிலர் இவரின் நம்பிக்கை பாரட்டக்குரியது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது குறித்து Leneathra Reed கூறுகையில், எனது உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கிறது. நான் இதை குறைக்க வேண்டும், இதை நான் என்னுடைய மகனுக்காக செய்கிறேன்.

இரண்டு வருடங்களில் நான் 600 பவுண்ட் எடையை குறைத்துவிடுவேன் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

எடை அதிகரித்து கொண்டே செல்வதால், எனக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்படுகிறது. மூச்சுவிடுவதற்கு சீரமமாக இருக்கிறது. தற்போது வரை 30 பவுண்ட் வரை எடை குறைந்துள்ளது.

இந்த எடை குறைப்பின் மூலம் ஓரளவிற்கு மூச்சு விட முடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் இவர் தன்னுடைய உடல் எடை குறைப்பதற்காக GoFundMe என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

இதன் மூலம் வரும் பணத்தை வைத்து அவர் சில அறுவை சிகிச்சைகள் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்