15 வயது சிறுமியை வாட்டி வதைக்கும் மர்ம நோய்! கண்களில் வழிந்த இரத்தம்: பார்வை பறிபோனது

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று திரும்பிய 15 வயது சிறுமி மர்ம நோயால் அவதிப்பட்டு வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Missouri பகுதியைச் சேர்ந்தவர் Jordyn Walker, 15 வயதான இவர் 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அதன் பின் வீடு திரும்பிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

வயிற்று போக்கின் போது, அவருக்கு இரத்தம் வந்துள்ளது. இதனால் அவர் Missouri-ல் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு சென்ற காத்திருந்த மூன்று, நான்கு மணி நேரத்திலே தன்னுடைய பார்வை திறனை இழந்துள்ளார்.

அதாவது சாதரணமாக கண்களில் இருகும் Pressure-ன் அளவு 12-22 மில்லி மீற்றர் மெர்குரி இருக்குமாம், ஆனால் இவருக்கு 85 மில்லி மீற்றர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் கண்கள் இரத்த வழிந்து சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. அவருக்கு என்ன பிரச்சனை? இது என்ன வகை நோய்? என்பதை மருத்துவர்கள் அறியமுடியாமல் தவிப்பதாக பிரபல ஆங்கில பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த நோயின் காரணமாக அவருக்கு சுவை, வாசனை போன்ற உணர்வுகளை இழந்து தவித்து வருகிறார்.

தற்போது இவர் கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் சுற்றுலா சென்று திரும்பு போது, கப்பலில் தான் வந்துள்ளார். அப்போது தான் ஏதோ ஒரு பிரச்சனை இவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு தான் அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக Jordyn Walke-ன் பெற்றோர் கூறியுள்ளனர்.

Jordyn Walker-ன் சிகிச்சைக்காக Go Fund Page மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்