புத்தாண்டு தினத்தில் நண்பனுடன் நெருக்கமாக இருந்த மனைவி: கணவன் எடுத்த முடிவு

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது நெருங்கிய நண்பனுடன் தனது மனைவி நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றைக்கண்ட ஒருவர் மனைவியையும், அவரது பெற்றோரையும் துப்பாக்கியால் சுட்டார்.

புளோரிடாவைச் சேர்ந்த William Brian Stillwell (39) Melbourneஇலுள்ள தனது வீட்டில் இருக்கும்போது தனது மனைவியாகிய Mona Stillwell மற்றும் அவரதுபெற்றோரை இடுப்பிலும் கால்களிலும் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் புத்தாண்டு தினத்தன்று நடந்தது.

வீடியோ ஒன்றில் தனது மனைவி, தனது நெருங்கிய நண்பனுடன் நெருக்கமாக இருப்பதைக்கண்ட William ஆத்திரத்தில் தனது மனைவியை இடுப்பில் சுட்டதோடு, அவரது பெற்றோரையும் சுட்டார்.

மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள்உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

William கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்