மெக்சிகோ எல்லையில் இரும்பில் சுவர் எழுப்பப்படும்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக மக்கள் நுழைவதை தடுக்க, கான்கிரீட்-க்கு பதில் இரும்பில் சுவர் எழுப்பப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக மெக்சிகோ மக்கள் நுழைவதைத் தடுக்க, அந்நாட்டு எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்றும், இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் கோரி வருகிறார்.

ஆனால், ஜனநாயக கட்சியினர் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், டிரம்ப் இவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப, நாட்டில் அடுத்த சில நாட்களில் அவசரநிலையை பிரகடனம் செய்யப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் டிரம்ப் கூறுகையில், ‘மெக்சிகோ எல்லையில் கான்கிரீட்டால் சுவர் எழுப்ப முடியாவிட்டால், இரும்பிலாவது சுவர் எழுப்பப்படும்’ என தெரிவித்தார். இதுவரை நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் இருப்பதால், கடந்த 2 வாரங்களாக அமெரிக்க அரசு அலுவலகங்கள் செலவுக்கு பணமின்றி முடங்கி கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்