ஆட்டிசம் பாதித்த 9 வயது மாணவனை தரையில் இழுத்து சென்ற ஆசிரியை! அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட 9 வயது மாணவனை ஒருவனை, ஆசிரியை தரையில் இழுத்துச் சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kentucky நகரில் உள்ள துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் Trina Abrams. இவரது வகுப்பில் படிக்கும் ஆட்டிசம் குறைபாடு கொண்ட 9 வயது மாணவன் ஒருவன், தனக்கு இடைவேளை வேண்டும் என்று கோரியுள்ளான்.

அதற்கு Trina வேலையை பார் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் குறித்த மாணவன் மிகவும் விரக்தியடைந்துள்ளான். இந்நிலையில், Trina குறித்த மாணவனின் கையை பிடித்து தர தரவென வகுப்புக்கு வெளியே தரையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையில் ‘நீ நடக்க வேண்டுமா?’ என Trina குறித்த மாணவனைக் கேட்டுள்ளார். அதற்கு அவன் இல்லை என்று பதிலளித்தைத் தொடர்ந்து இழுத்துச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் எழுந்திரு என அவனை கடிந்துள்ளார்.

ஆனால் மாணவன் மறுக்கவே வேகமாக இழுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கமிராவில் பதிவானதைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் Trina-வை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துதல் பிரிவின் கீழ், Trina மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். .

பாதிக்கப்பட்ட சிறுவனின் கையில் மணிக்கட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவனின் தாயார் ஏஞ்சல் நெல்சன் கூறுகையில்,

‘அவர் (Trina) எனது மகன் தன்னை தானே தாக்கிக்கொள்வதை தடுத்ததாக கூறுகிறார். ஆனால் வீடியோவை பார்க்கும்போது அவ்வாறு இல்லை. என் மகனுக்கு நீதி தேவை. திருமதி.ஆப்ராம்ஸ் தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers