10 ஆண்டுகளாக கோமா! குழந்தை பிரசவித்த அந்த பெண் யார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக கோமாவிலிருந்த ஒரு பெண் திடீரென பிரசவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண் பாதுகாக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.

San Carlos Apache பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அந்த பழங்குடியினத்தின் தலைவரான Terry Rambler தெரிவித்துள்ளார்.

தங்கள் இனத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுய நினைவின்றி இருந்த அந்த பெண்ணை யாரோ பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாலேயே அவர் கர்ப்பமுற்றிருக்கிறார்.

அதனால் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஆண்களின் DNAவையும் சேகரித்து அந்த குழந்தையின் DNAவோடு ஒப்பிட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்த குழந்தையை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளதாகவும், அந்த ஆண் குழந்தை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நன்றாக கவனிக்கப்படுவான் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுய நினைவற்ற நிலையில் இருந்த அந்த பெண் பிரசவிக்கும்போது, அந்த குழந்தை கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு சென்றதாகவும், ஆனால் தற்போது அது நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்