கணவரை விவகாரத்து செய்து 12 ஆயிரம் கோடிக்கு அதிபதியாகும் மனைவி! உலகின் பணக்கார பெண் என்ற பெருமை

Report Print Santhan in அமெரிக்கா

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸை விவகாரத்து செய்வதன் மூலம் அவரது மனைவி மெக்கின்சி உலகின் மிகப் பெரிய பணக்கார பெண் என்ற பெருமையை பெறவுள்ளார்.

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஜெப் பெஜோஸ்(54). இவருக்கும் மெக்கென்சி(48) என்பவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். உலகின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பெஜோஸ் உள்ளார்.

இப்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் இவர் தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இந்த முடிவை இரண்டு பேரும் சம்மதத்துடனே எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெப் பிசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கின்சி டட்டில் இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்துள்ளதால் இதன்மூலம், அமேசான் நிறுவனத்தில் ஜெப் பிசோஸ் வைத்திருக்கும் பங்கில் பாதி சட்டப்படி மக்கின்சிக்குச் சொந்தம் ஆகும்.

இதனால் உலகின் முதல் பணக்காரப் பெண் என்ற இடத்தை மெக்கின்சி பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனத்தைத் தொடங்கிய நிறுவனர் ஜெப் பிசோஸ் அந்த நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார்.

இதன் மதிப்பு 136 பில்லியன் டொலர். தற்போது ஜெப் பிசோஸும்,அவரது மனைவி மக்கின்சியும் தங்களது 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக வெளிப்படையாக கூறியுள்ளனர்.

விவாகரத்து செய்து கொண்டால் சட்டப்படி ஜெப் பிசோஸுக்குச் சொந்தமான சொத்துகளில் பாதியளவு, மனைவி மக்கின்சிக்குச் சொந்தமாக உள்ளது.

அதில்அமேசான் நிறுவனத்தில் ஜெப் பிசோஸ் வைத்துள்ள பங்குகளும் அடங்கும்.

எனவே பங்குகளில் பாதியளவு மனைவி மக்கின்சிக்குக் கொடுக்கப்படும்பட்சத்தில் 68 பில்லியன் டாலர்(இலங்கை மதிப்பில் தற்போது 12,37,19,20,000 கோடி ரூபாய்) சொத்துக்கு மக்கின்சி உரிமையாளராவார்.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண்ணாக அவர் மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்