4 வயது சிறுமியை கொடூரமாக அடித்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி காரணம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் காதலியின் 4 வயது மகளை கொடூரமாக அடித்து கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Waukegan பகுதியை சேர்ந்த ஜொனாதன் ஃபேர் (19) தன்னுடைய காதலியின் 4 வயது மகளான ஸ்கைலார் மெண்டீஸ் உடன் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது கையில் ஆரஞ்சு பழச்சாறுடன் வந்த சிறுமி கைதவறி, அங்கிருந்த விளையாட்டு பொருளான xbox மீது சிந்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜொனாதன், வீட்டின் பின்புறம் வைத்து சிறுமியை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளான்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே அடித்து துன்புறுத்தப்பட்டு கொடுமைப்படுத்த பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளியை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டதோடு பிப்ரவரி 17ம் திகதிக்கு வழக்கினை மாற்றி உத்தரவிட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்