ஆபத்தான ஜிம்னாஸ்டிக்ஸ் அசைவுகளை அனாயாசமாக செய்த அழகிய இளம்பெண்: வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஆபத்தான அசைவுகளை சிரித்துக் கொண்டே செய்யும் ஒரு அழகிய இளம்பெண், ஜிம்னாஸ்டிக்ஸ் மேடையை நடன அரங்கமாக்கிய ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

Katelyn Ohashi (21) என்னும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை, போட்டி ஒன்றில் பங்கேற்கும்போது நடன அசைவுகளுடன் செய்த ஆபத்தான அசைவுகளை பார்த்தவர்கள், தங்கள் உடலில் வலியை உணர்ந்தார்கள் என்றே சொல்லலாம், அப்படி இருந்தது அவரது பெர்பார்மன்ஸ்.

ட்ரிப்பில் ஜம்ப் ஒன்றை செய்த Katelyn, முடிக்கும்போது தன் கால்களை அகல விரித்து நேர் கோடாக்கி அப்படியே தரையில் விழுந்ததுடன் மீண்டும் எழுகிறார்.

தசை நார்களைக் கிழித்து விடக்கூடிய ஆபத்தான ஒரு செயல் அது.

தனது நடனம் ஆரம்பிப்பது முதல் முடியும் வரை புன்னகை மாறாத முகத்துடன், மைக்கேல் ஜாக்ஸனின் பின்னணி இசையுடன், திடீரென அவரைப்போலவே ஸ்டெப்ஸ் போட்டு, பின்னர் பந்து போல் துள்ளிக் குதிப்பதைக் காணும்போது மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

நடனத்தின் மிகுதியில் உற்சாக மிகுதியால் தனது நண்பர்களுடன் ஹை பைவுடன் முடிக்கிறார் Katelyn.

கூட்டம் வானைத் தொடும் அளவிற்கு ஆரவாரம் செய்ய, நடுவர்கள் முழுமையாக 10 மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள் Katelynக்கு.

அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள UCLA ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பு அதன் கீழ், இந்த நடனத்திற்கு 10 மதிப்பெண்கள் போதாது என்று எழுதியிருக்கிறது.

வெகு விரைவில் வைரலான இந்த வீடியோவைப் பார்த்த ஒருவர், நானென்றால் அவ்வளவு தசை நார்களையும் கிழித்துக் கொண்டிருப்பேன் என்று ட்வீட் செய்திருந்தார்.

இன்னொருவர், எனக்கு சுத்தமாக ஜிம்னாஸ்டிக்ஸ் தெரியாது, ஆனால் அதைப் பார்க்கும்போதே நான் வலியை உணர்கிறேன் என்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்