உலக கோடீஸ்வரரின் அந்தரங்க படங்கள் வெளியானது எப்படி? ரகசிய காதலியின் மறுமுகம் அம்பலம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

எப்போதும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட Lauren Sanchez (49), அமேஸான் நிறுவனரான Jeff Bezos (55) உடனான நட்பு கிடைத்ததும், இப்படிப்பட்ட ஒருஆண்தான் எனக்கு வேண்டும் என்று கூறியதாக அவரது தோழிகள் கூறியுள்ளனர்.

Sanchez, Albuquerqueஇல் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு மூன்றாம் தலைமுறை மெக்ஸிகன் - அமெரிக்கராவார்.

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், தனது பாட்டி வீடுகளை சுத்தம் செய்யும் வேலைக்காகச் செல்லும்போது, தான் அவரது காரின் பின் சீட்டில் உறங்குவது வழக்கம் என்று அவர் கூறியிருந்தார்.

அப்படி ஒரு வறுமையிலிருந்து வந்த Sanchez, அழகிய இளம்பெண்ணானதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.

வானில் பறக்கும் ஆசை கொண்ட Sanchez, பின்னர் வானிலிருந்து படம்பிடிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் கணவருடன் வாழ்ந்தாலும், அமேஸான் நிறுவனரான Bezos தனது நிறுவனத்தின் படப்பிடிப்பு ஒன்றிற்காக Sanchezஐ அமர்த்த,இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டது.

Bezosஐ சந்தித்ததுமே, இப்படிப்பட்ட ஒரு ஆண் தான் எனக்கு வேண்டும் என தனது தோழி ஒருவரிடம் கூறினாராம் Sanchez.

அவர் குறிப்பிட்டது Bezosஇன் பணத்தைத்தான் என்று அடித்துச் சொல்கிறார் அந்த தோழி.

அதற்கேற்றாற்போல் 25 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவியை Bezos விவாகரத்து செய்ய, இருவருக்கும் இடையேயான உறவு குறித்த பல விடயங்கள் வெளியாகத் தொடங்கின.

அந்தரங்க செய்திகள், நிர்வாண புகைப்படங்கள் தொடங்கி, படுக்கைவரை இருவரும் பகிர்ந்து கொள்ளத் தொடங்க, எப்போதும் தன் ஆடம்பர வாழ்வு குறித்து டம்பம் அடித்துக் கொள்ளும் Sanchez, Bezos அனுப்பிய அந்தரங்க செய்திகளையும் நிர்வாணபுகைப்படங்களையும் காட்டி, தனது புதிய காதலரை குறித்து தனது நெருங்கிய தோழியிடம் உளறிக் கொட்ட, அந்த புகைப்படங்களை அந்த தோழி பத்திரிகைக்கு கொடுத்துவிட்டார்.

இப்படித்தான் இருவருக்குமிடையே இருந்த அந்தரங்க உறவு வெளி உலகுக்கு தெரியவந்தது.

இப்போது ஆடம்பர ஆசை கொண்ட Sanchez, திட்டமிட்டே Bezosஇன் வாழ்வில் நுழைந்துள்ளதும் அவரது நெருங்கிய தோழிகளாலேயே தெரிய வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்