பூனையை புதைப்பதாக கூறி சொந்த மகளை புதைத்த தந்தை! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் காதலியுடன் இணைந்து தந்தை ஒருவர் சொந்த மகளை கொன்று, செல்லா பிரணிகள் புதைக்கும் இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.

அமெரிக்கவில் புதிய மெக்சிகோவை சேர்ந்த சூபெர். இவர் நில அளவை செய்யும் பணி செய்பவர்.

இவர் வசித்து வரும் குடியிருப்பின் உரிமையாளரிடம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன் தன்னுடைய செல்ல பிராணி இறந்துவிட்டது என்றும் அதனால் அதை புதைக்க இடம்மளிக்கும்படியும் கோரியுள்ளார்.

உரிமையார் தனது வீட்டின் அருகில் இருந்த செல்ல பிராணிகள் புதைக்கும் இடத்தில் இடமளித்துள்ளார்.

இந்நிலையில் சூபெர் இரு கட்டியான வெள்ளை பேப்பரில் பொதிந்த ஒன்றை புதைக்க எடுத்து வந்துள்ளார்.

அந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நபரான துர்மன் டன், அந்த பகுதியில் நிற்பதை பார்த்து அவரிடம் தான் செல்ல பிராணியை புதைப்பதாகவும் கூறி உதவி கோரியுள்ளார். துர்மன் டன் அவருக்கு உதவி உள்ளார்.

ஆனால் அதன்பின் சூபெர் நடிவடிக்கையில் ஏதோ மாற்றம் தெரிந்திருக்கிறது. அவர் அடிக்கடி அந்த செல்லபிராணிகள் புதைக்கும் இடத்தில் சுற்றி வந்துள்ளார்.

இதை பார்த்த துர்மன் டனுக்கு சந்தேகம் ஏற்படவே பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பொலிசார் தோண்டியதில் அதில் குழந்தை இருப்பதை கண்டு பொலிசார் மற்றும் குடியிருப்புவாசிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சூபெர்சிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவரே தனது சொந்த மகளான ஒருவயது அனஸ்டாசியா ரோமெரோ-வை தனது காதலியான மோனிக் ரோமெரோவுடன் இணைந்து கொடுமைபடுத்தி வந்ததும். அதன் விளைவாக கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து குடியிருப்பு உரிமையாளர் தெரிவிக்கையில் நான் வீட்டின் செல்ல பிராணியை புதைக்கதான் இடம் கேட்டார் என்று வழங்கினேன் ஆனால் குழந்தையே புதைப்பார் என்னு எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்