மகனின் முடியை பிடித்து இழுத்து சென்ற தாய் – பதற வைத்த காட்சி

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில்உள்ள Rush Copley Medical Center in Aurora என்ற மருத்துவ மையத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவனின் தலை முடியை பிடித்து தாய் இழுத்துசென்ற காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின்முக்கிய பகுதியில் Rush Copley Medical Center in Aurora என்ற மருத்துவ மையம் அமைந்துள்ளது.

சம்பவத்தன்று தாயான Yanks என்பவர் தனது 5 மற்றும் 2 வயதான இரு குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகள் இருவரும் வரவேற்பறையில் சண்டைபோட்டு விளையாடி கொண்டிருந்தனர்.

அமைதியாக இருக்க கூறியும் தாய் கேட்காததால் தனது ஐந்து வயது மகனின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்று உட்கார வைத்துள்ளார்.

பின் தொடர்ந்து தனது மொபையில்போனை பார்த்த வண்ணம் நடந்திருக்கிறார். இதை அவரது இளைய மகனான 2 வயது சிறுவன் பார்த்துகொண்டு நிற்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளைதொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் தரப்பில் குழந்தை தற்போது தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்