அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலிருந்த பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு சர்ச்சை

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் கோமாவிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சர்ச்சை ஓயும் முன், அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலிருந்த ஒரு பெண் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த ஜெக் என்று அழைக்கப்படும் 23 வயது இளம்பெண் Rett Syndrome என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரால் பேசவோ, அசையவோ, சுயமாக சிந்திக்கவோ முடியாத நிலையில் வீல் சேரில் வைத்துதான் அவரை கொண்டு செல்ல வேண்டும்.

இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பள்ளி ஒன்றிற்கு அவரது தாயார் அவரை அனுப்பி வந்தார்.

இந்நிலையில் தானாக சிறுநீர் கழிக்கக் கூட இயலாத அந்த இளம்பெண்ணுக்கு பெண் உதவியாளர்கள் நேப்பியை மாற்றும் போது அவளது தொடையில் காயம் பட்டிருப்பதைக் கண்டிருக்கின்றனர்.

அது மட்டுமின்றி வழக்கத்திற்கு மாறாக அழுது கொண்டே இருந்த அவளை உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மருத்துவர்கள் அவளை பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.

வெளியான பரிசோதனையின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஜெக்கின் தொடையில் மட்டுமல்லாது அவளது பெண்ணுறுப்பிலும் காயங்கள் இருந்தன. அவளது இடுப்பு எலும்பு முறிந்திருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக அவள் இரண்டு முதல் மூன்று வாரங்கள் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

தானாக எதையும் செய்ய இயலாத ஜெக், முழு நேரமும் புளோரிடாவிலுள்ள Pensacola Cluster health care facility என்னும் காப்பகத்திலுள்ளவர்களால்தான் பராமரிக்கப்பட்டு வந்தார்.

அதனால்தான் அங்கு உள்ள யாரோதான் ஜெக்கை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதால், பொலிசார் அந்த காப்பகத்தில் உள்ளவர்களை DNA பரிசோதனைக்குட்படுத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

அதனால் உடனடியாக ஜெக்கை வேறு இல்லத்திற்கு மாற்றிய அவரது தாயார், Pensacola Cluster health care facilityயின்மீது 15,000 டொலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers