தேனிலவு கொண்டாட்டத்தில் பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தம்பதி: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட புதுமண தம்பதிகள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் திரூர் பகுதியை சேர்ந்த பிரபல மருத்துவர்களான விஸ்வனாதன் மற்றும் சுஹாசினி தம்பதிகளின் மகனான விஷ்ணு(29) மற்றும் அவரது மனைவி மீனாட்சி(29) ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் தேனிலவு கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளனர்.

இருவரும் நீண்ட தூர பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், தங்களது பயணங்கள் தொடர்பில் புகைப்படங்கள் பதிவு செய்து தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளனர்.

சுமார் 25,000 பின்பற்றுபவர்களையும் இவர்கள் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கலிபோர்னியாவில் உள்ள தேசிய பூங்காவில் மலை உச்சியில் நின்று சிறப்பான புகைப்படம் ஒன்றிற்காக முயற்சிக்கையில் தடுமாறி 245 மீற்றர் பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான போராட்டத்தின் இறுதியில் பொலிசார் அவர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.

தற்போது இருவரது உடற்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் அதன் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் இருவரும் மது போதையில் இருந்ததாகவும், செல்ஃபி ஒன்றை முயற்சிக்கையில் தடுமாறி விழுந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதை மருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்து ஒரு நாள் கடந்த பின்னரே சடலங்களை மீட்க முடிந்தது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers