அமெரிக்க வரலாற்றில் நீண்ட நாட்களாக தொடர்ந்த முடக்கம்: முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் தொடர்ந்து வந்த அரசு பணி முடக்கத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை அமெரிக்காவில் நிதியாண்டாக கணடக்கிடப்படுகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1ஆம் திகதி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எல்லைச் சுவர் எழுப்ப டிரம்ப் கேட்ட நிதித்தொகையாகும். இதன் காரணமாக கடந்த 20ஆம் திகதி அரசு நிர்வாகம் முடங்கியது.

பெரும்பாலான துறைகள் இதனால் மூடப்பட்டது. எனினும், அத்தியாவசிய தேவைகளுக்கான துறைகள் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்ததால், இது அமெரிக்க அரசு வரலாற்றில் நீடித்த மிக நீண்ட அரசுப் பணி முடக்கம் ஆகும்.

இந்நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக இந்த அரசுப் பணி முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டும் தற்காலிகமாக, இந்த அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான ஒப்பந்தத்திலும் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார்.

இது வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘லட்சக்கணக்கான மக்கள் இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, அதனை நீக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்