உயிர்தோழியை 40 முறை கத்தியால் குத்தி கொன்ற இளம்பெண்: கடைசியாக எழுதிய வரிகள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய உயிர்தோழியை 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் ராட்கோர்டு பல்கலைக்கழகத்தில், லூயிசா கட்டிங் (21) மற்றும் அலெக்சா கேனான் என்கிற இரண்டு மாணவிகளும் பயின்று வந்தனர்.

உயிர்தோழிகளான இருவரும் ஒரே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று, லூயிசா தன்னுடைய தோழியை 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அந்த ரத்தம் தோய்ந்த கத்தியை அலெக்சாவின் வாயில் சொருகியுள்ளார். இதற்கிடையில் அலறும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அலெக்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது லூயிஸா, என்னை கைது செய்யுங்கள் நான் தான் கொலை செய்தேன் என கூறியுள்ளார். கடந்த ஒரு வருடமாக ஒற்றுமையுடன் இருந்த தோழிகள், தற்போது கொலை செய்யும் அளவிற்கு சென்றிருப்பதற்கான காரணம் பற்றி பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக அலெக்சா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் இந்த பெண்ணை சந்தித்தேன்.

எப்படியோ நாம் இருவரும் இந்த ஒரு ஆண்டை சேர்ந்து வாழ்ந்து முடித்துவிட்டோம். இந்த கோடையில் மெக்சிகோ சென்றபோது அவள் எனக்கு ஒரு தாயை போல மாறியிருந்தாள்.

கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அவள் இன்னும் என்னுடன் பழகிக்கொண்டிருக்கிறாள். நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன் லூயிசா, இந்த வருடம் நாம் ஒருவரை ஒருவர் கொலை செய்யக்கூடாது என அனைவரும் பிராத்தனை செய்கிறார்கள் என பதிவிட்டிருந்தார.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers