வரலாறு காணாத உறைய வைக்கும் பனி.. அண்டார்டிகாவாக மாறிய அமெரிக்கா!

Report Print Kabilan in அமெரிக்கா

ஆர்டிக் பகுதி மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு அமைப்பினால், அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும், கடுங்குளிரும் நிலவி வருகிறது.

அமெரிக்காவில் பல இடங்கள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு அங்கு பனிபொழிந்து வருகிறது. சில இடங்களில் மைனஸ் 23-28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சில இடங்களில் மைனஸ் 35-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவி வருகிறது.

சிகாகோவில் இரவு நேரங்களில் மைனஸ் 50 டிகிரியாகவும் வெப்பநிலை கடும் சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலைகளையும் பனி மூடியுள்ளது. அத்துடன் ரயில்வே தண்டவாளங்களை பனி மறைத்து இருக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பனியால் பாதிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகன் ஏரி முழுவதும் உறைந்து போய் காட்சியளிக்கிறது. வடக்கு மற்றும் மத்திய ஜார்ஜியாவில் வரும் நாட்களில் இன்னும் பனிப்பொழிவும், குளிர் காற்றும் அதிகம் இருக்கும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டும், அறிவுறுத்தப்பட்டும் உள்ளது. மேலும் கடைகள், உணவகங்கள் மொத்தமாக மூடப்பட்டு இருக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...