பிரித்தானியர் என்பதை மறைத்த அமெரிக்க பிரபலம் கைது! புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிரடி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் ஒருவர் உண்மையில் ஒரு பிரித்தானியர் என்பதும், அவரது விசா காலம் முடிந்து அவர் அமெரிக்காவில் நீண்ட காலம் தங்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவரை அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

21 Savage (26) என்று அழைக்கப்படும் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவரான Sha Yaa Bin Abraham- Joseph, 12 வயதாக இருக்கும்போது 2005ஆம் ஆண்டு சட்டப்படி அமெரிக்காவுக்குள் வந்திருக்கிறார்.

ஆனால் அவரது விசா காலம் 2006இல் முடிவடைந்தும் அவர் அதை புதுப்பிக்காமல் தொடர்ந்து அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார்.

பிரபல அமெரிக்க நடிகையும் மொடலுமான Amber Roseஇன் முன்னாள் காதலரான Joseph நேற்று காலை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வாரம் நடக்க இருக்கும் கிராமி விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நேரத்தில் Joseph கைது செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

விரைவில் அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர், தான் பிரித்தானியர் என்பதை மறைத்த விடயம்வேறு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்