வீட்டின் மீது மோதி வெடித்து சிதறிய விமானம்: 5 பேர் பலி.... வெளியான பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோர்பா லிண்டா நகரின் வழியாக பறந்து சென்ற ஒரு சிறியரக விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் விமானி மற்றும் வீட்டுக்குள் இருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

விமானத்தில் விமானி மட்டுமே இருந்தார் என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் வெளிடப்படாத நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers