குழந்தை இறந்து போகும்! பெற்றெடுத்த தாயின் நெகிழ்ச்சி செயல்- நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தை இறந்து போகும் என தெரிந்தும், பெண் ஒருவர் அதனை பெற்றெடுத்து உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி டேவிஸ் லோவட்- கிறிஸ்டா டேவிட் ஆகியோருக்கு கடந்தாண்டு டிசம்பவர் 25ம் திகதி பெண் குழந்தை பிறந்தது, இதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர்.

குழந்தை வயிற்றில் 18 வார கருவாக இருந்த போதே, குறைபாடுகளுடன் வளர்வதாகவும், சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குழந்தை பிறந்தாலும் 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்து, உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.

இதன்படி குழந்தை பிறந்ததும், மருத்துவர்களின் முயற்சியால் ஒருவாரம் வரை உயிருடன் இருந்த ரைலேவின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஒருவாரம் வரையில் தன் குழந்தையுடனேயே தங்கியிருந்த பெற்றோருக்கு வலி மிகுந்த நாட்களாக இருந்ததாம்.

ஒருதடவை கூட தன் குழந்தை அழவே இல்லை என கூறும் பெற்றோர், இறப்பதற்கு முன் அழுததை கண்டு மனம் நொந்து போனதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டதாகவும், கிட்னி மற்றும் பிற உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers