அவரது அறையில் தினமும் குழந்தைகளின் உள்ளாடைகள் இருக்கும்: மைக்கேல் ஜாக்சன் பற்றி பணிப்பெண் பகீர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

மைக்கேல் ஜாக்சனின் அறையில் தினமும் குழந்தைகளின் உள்ளாடைகள் இருக்கும் என அவருடைய பணிப்பெண் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகரான மைக்கேல் ஜாக்சன், குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட நபர் என்ற குற்றசாட்டானது பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

இந்த விவகாரம் சமீபத்தில் லிவிங் நெவர்லாண்ட் என்ற ஆவணப்படத்தின் மூலம் பூதாகரமாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், சிறுவயது முதலே 7 ஆண்டுகள் மைக்கேல் ஜாக்சன் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அவருடைய குடும்பத்தார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனிடம் நான்கு ஆண்டுகள் பணிப்பெண்ணாக பணிபுரிந்த அட்ரியன் மெக்மனாஸ் (56), பகீர் தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

மைக்கேல் ஜாக்சன் அறையை சுத்தம் செய்யும் போது, தினமும் ஏராளமான குழந்தைகளின் உள்ளாடைகள் இருக்கும். குளியலறையில் அவருடைய உள்ளாடையுடன் குழந்தைகளின் உள்ளாடைகளும் மிதக்கும்.அதன் அருகே பாலியல் விளையாட்டிற்கு பயன்படுத்தும் பொருட்களும் காணப்படும்.

அவரது வீட்டிற்கு வெளியில் சிறுவர்கள் அரை நிர்வாணத்துடன் சுற்றி திரிவார்கள். வீட்டிற்கு புதிதாக வரும் குழந்தைகளின் கைகளை பிடித்து மைக்கேல் ஜாக்சன் முத்தம் கொடுப்பார். ஆனால் அதற்கு அந்த குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

இதுபற்றி தெரிந்தும் நான் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. அவர் என்னுடைய முதலாளி என்பதால் கேட்பதற்கு பயம். அவருடைய பாதுகாவலர்கள் என்னை எதுவும் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது.

வீட்டில் இருக்கும் மறைக்கப்பட்ட ஒரு அலமாரியில் ஏராளமான வீடியோ கேசட்டுகள் உள்ளன. அவை அனைத்தும் குழந்தைகள் பற்றிய ஆபாச படங்களாக தான் இருக்க வேண்டும். அதனால் தான் அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என கூறியிருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers