காலை ஓட்டத்திற்காக சென்றவர் மீது சீறிப்பாய்ந்த சிங்கம்: வெறுங்கையால் வீழ்த்தி சாகஸம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்கர் ஒருவர் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தை வெறுங்கையால் கொன்று ஹீரோவாகியிருக்கிறார்.

Coloradoவில் காலை ஓட்டத்திற்காக செல்லும் நேரத்தில் Travis Kauffman (31) என்பவரை சிங்கம் ஒன்று தாக்கியிருக்கிறது.

நேற்று, தான் சந்தித்த திகில் சம்பவத்தை பத்திரிகையாளர்கள், வன விலங்கு அலுவலர்கள் முன் பகிர்ந்து கொண்ட Kauffman, தனது காயங்களையும் காட்டினார்.

தனது மணிக்கட்டை சிங்கம் கௌவிக் கொண்டது எனவும், முகத்தையும் கைகளையும், நகங்களால் தாக்கியது என்றும் கூறியுள்ளார் அவர்.

சிங்கத்தைத் தரையில் தள்ளி அதன் மீது ஏறி அமர்ந்த Kauffman தன் கால்களால் அதன் கழுத்தை நெறித்து கொன்றிருக்கிறார்.

அவருக்கு முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்கள் முழுவதும் கீறல்கள் ஏற்பட்டுள்ளது.

காயங்களிலிருந்து தேறி வருவதற்கு அவருக்கு உடல் முழுவதும் 20 தையல்கள் தேவைப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்