திரையரங்கில் திடீரென எழுந்த அவசர ஒலி: காயங்களுடன் தெறித்து ஓடிய பொதுமக்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள திரையரங்கில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அலறியடித்து ஓடிய பொதுமக்கள் பலரும் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்திருக்கும் ஆரஃபும் திரையரங்கில், மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்துள்ளது.

அதை காண்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

அப்போது திடீரென பெண் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதை பார்த்த ஊழியர், அவசர ஒலியை எழுப்பியுள்ளார்.

இதனை கேட்ட பொதுமக்கள் துப்பாக்கி என நினைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வேகமாக வந்த பொலிஸார், மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணுக்கு கால் முறிந்ததோடு, இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers