தாயாரின் சடலத்தை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் இறந்துபோன தனது தாயாரின் சடலத்தை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவர் ஜோ விட்னி அவுட்லண்ட்(55). இவரது தாயார் ரோஸ்மேரி(78).

ஜோ விட்னியின் குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. சம்பவத்தன்று விட்னியின் உறவினர் ஒருவர், அவரது குடியிருப்பு சன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது, விட்னியின் தாயாரின் சடலம், போர்வைகளால் சுருட்டி வைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார்,

விட்னியின் தாயாரின் உடல் 54 போர்வைகள் கொண்டு சுருட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவரது குடியிருப்பில் சோதனை மேற்கொண்டபோது, கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் ரோஸ்மேரி கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று உயிரிழந்ததாக எழுதப்பட்டிருந்தது. இடைப்பட்ட நாட்களில் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என யாரையும் விட்னி வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை.

சடலத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை மறைக்க, 66 விதமான ரூம் ஃப்ரஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி விட்னியின் தாயாரின் மரணத்திற்கு பிறகு உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாயன்று விட்னி கைது செய்யப்பட்டார். அவரை பொலிசார் நீதிமன்றத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால் விட்னி தரப்பில் வாதாட வக்கில் யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதன் பின்னர் பொலிசாரின் விசாரணையில் இருந்த அவரை விடுவித்து, மீண்டும் பிப்ரவரி 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் அழைத்து வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தாயாரின் இறப்பினை வெளியில் சொன்னால் பொலிசார் தம்மை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் யாரிடமும் கூறவில்லை என விசாரணையின்போது விட்னி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers