பூங்காவில் பிணமாகக் கிடந்த 20 வாரக் குழந்தை: தாயை தேடும் பொலிசார்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பூங்கா ஒன்றில் 20 வார குழந்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் அதன் தாயை தேடி வருகின்றனர்.

மரம் ஒன்றின் கீழ் கிடந்த அந்த உயிரற்ற கருவைக் கண்ட வழிப்போக்கர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

20 வாரக்கருவான அந்த குழந்தை ஒரு வாழைப்பழத்தின் அளவில், சுமார் 10.2 அவுன்ஸ் எடையும் 6.5 இன்ச் நீளமும் உடையதாக இருந்தது.

அந்த குழந்தை யாருடையது, அதை யார் கொண்டு வந்து பூங்காவில் போட்டார்கள் என்பது தெரியாததால் யார் வீட்டிலாவது CCTV கெமரா இருந்தால் அதை பயன்படுத்தி தேடலாம் என பொலிசார் முயற்சி செய்து வருகிறார்கள்.

நேற்று பொலிசார் அப்பகுதியில் வீடு வீடாக சென்று அவர்களிடம் கெமரா உள்ளதா என்பதை விசாரிப்பதைக் காண முடிந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers