கணவனை ஏமாற்றி இளைஞனுடன் நெருக்கமாக இருக்க நினைத்த மனைவி! அதன் பின் கண்மூடித்தனமாக அடித்த சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் நண்பன் உறவுக்கு மறுத்ததால், அந்த பெண் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Vero பீச் பகுதியைச் சேர்ந்தவர் Samantha Jewel Hernandez. 21 வயதான இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று, இவருடைய நண்பன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சமந்தா தன்னுடைய கணவருக்கு மயக்க மருத்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

அதன் பின் நண்பனிடம் நெருங்கி சென்று அவருடன் நெருக்கமாக இருக்க முயன்றுள்ளார். இதனால் அவர் தன்னை நிர்வாணப்படுத்தி கொண்டுள்ளார்.

ஆனால் அவரோ இதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த சமந்தா அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் சமந்தாவை பிடித்து கைது செய்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், அந்த நபர் தன்னை நெருக்கமாக இருக்கும் படி வற்புறுத்தியதாகவும், மறுத்ததால் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின் பொலிசார் சமந்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்ததால், இப்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers