வெளிநாட்டில் மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்: அலறியடித்து ஓடிவந்த மகள்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்கா வாழ் இந்திய கணவன் மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாச நாக்ரங்கந்தி (51) மற்றும் அவரது மனைவி சாந்தி (46) டெக்ஸாஸ் மாகாணத்தில் தங்களுடைய 16 வயது மகள் மற்றும் 21 வயது மகனுடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போதே காரில் வைத்து மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் கதவை அடைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

அந்த சமயம் வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்த அவருடைய மகள், வேகமாக ஓடிவந்து கதவை திறக்க முற்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த சிறுமி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, ஸ்ரீனிவாஸ் தோட்டா பாய்ந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு அருகே ஒரு கைத்துப்பாக்கி கிடந்ததையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறப்பதற்கு முன்பு மின்னஞ்சல் ஒன்றினை ஸ்ரீனிவாஸ், அவருடைய நண்பருக்கு அனுப்பியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers