கருப்பை புற்றுநோய் இருப்பதாக கூறிய பெண்... லட்சக்கணக்கில் பண உதவி செய்த நண்பர்கள்... 4 வருடம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in அமெரிக்கா

இளம்பெண்ணொருவர் தனக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதாக கூறி தனது நண்பர்களிடம் லட்சக்கணக்கில் பண உதவி பெற்ற நிலையில் அவருக்கு நோயே இல்லை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெசிகா (25). இளம் பெண்ணான இவர் தனக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கடந்த 2013-ல் தனது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களிடம் கூறினார்.

இதையடுத்து ஜெசிகா மீது இரக்கப்பட்ட நண்பர்கள் அவருக்கு பண உதவி செய்ய தொடங்கினார்கள்.

ஜெசிகா சாப்பிட உணவுகளை வழங்குவது, அவரது மருத்துவ செலவுக்கு பணம் கொடுப்பது என நண்பர்கள் பலர் உதவினார்கள்.

அதாவது 4 ஆண்டுகள் புற்றுநோயால் ஜெசிகா போராடிய நிலையில் அவருக்கு £7,600 பணம் வரை உதவி கிடைத்தது.

கடந்த 2017-ல் புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் எப்படி தங்களது தலையை மொட்டையடித்து கொள்வார்களோ அதே போல ஜெசிகாவும் அடித்து கொண்டார்

இந்நிலையில் தான் ஜெசிகாவின் தோழியான லுன்ஸ்வர்டுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த 2017-ல் ஜெசிகா அலுவலகத்தில் திடீரென நோய் முற்றியதாக மயங்கி விழுந்தார்.

இது சம்மந்தமான சிசிடிவி வீடியோவை லுன்ஸ்வர்ட் எதேச்சியாக பார்த்த போது ஜெசிகா வேண்டுமென்றே மயக்கம் வருவது போல நடித்து கீழே விழுவது போல மெதுவாக உட்கார்ந்தது தெரியவந்தது.

இது குறித்து லுன்ஸ்வர்ட் மற்றும் நண்பர்கள் ஜெசிகாவிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது தனக்கு கருப்பை புற்றுநோய் என கூறியது பொய் எனவும், மற்றவர்களிடம் பணம் வாங்கி சொகுசாக வாழவே இப்படி செய்ததாகவும் கூறி ஜெசிகா அனைவரையும் அதிரவைத்தார்.

பின்னர் அனைவரும் சேர்ந்து ஜெசிகாவை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இது குறித்து லுன்ஸ்வர்ட் கூறுகையில், ஜெசிகா போன்ற மோசமான பெண்ணை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

பணத்துக்காக எங்களை ஏமாற்றிய அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்