தனக்காக எதையும் செய்ய தயாராக இருந்த ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனையே கொன்ற மனைவி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மிச்சிகனைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எதைச் சொன்னாலும் தலையாட்டும் ஒரு காதலன் கிடைத்த நிலையில், தன் கணவனையே அவள் கொல்லச் சொல்ல, அதற்கும் தலையாட்டியிருக்கிறான் அந்த காதலன், இருவரும் கம்பி எண்ணுகிறார்கள் இப்போது.

Ammar என்பவர் மிச்சிகனிலுள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்ததையடுத்து அவரது மனைவியாகிய Bdour Mohammed-Ali Al-Yasari (28)ஐ பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் தனக்கு ஒரு ரகசிய காதலன் இருப்பதை ஒப்புக்கொண்ட Bdour அவரது பெயரைக் கூற மறுத்து வந்தார்.

ஆனால் அவர் Jacob Joseph Ficher (27) என்பவருடன் நெருக்கமாக சுற்றுவதை அப்பகுதியில் உள்ள பலர் கண்டிருப்பதாக பொலிசாருக்கு துப்புக் கொடுக்க, பொலிசார் Jacobஐக் கைது செய்தனர்.

விசாரணையில், Jacob உறுதியான மன நலம் இல்லாதவர் என்றும், Bdour மீதிருந்த பைத்தியக்காரத்தனமான காதலால் அவர் என்ன சொன்னாலும் செய்யக்கூடியவர் என்பதும் தெரியவந்தது.

Bdour, Jacob மீது கொண்ட காதலால், தங்களுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்ய, Jacob அவருக்கு உதவ இருவருமாக சேர்ந்து கோடரியால் அவரை வெட்டிக் கொன்றிருக்கின்றனர்.

பொலிசார் Jacob வீட்டை சோதனையிடும்போது, அந்த கோடரியை வாங்கிய ரசீதும், அதற்காக அவர் பஸ்ஸில் பயணம் செய்த டிக்கெட்டும் சிக்கின.

காதல் கண்ணை மறைக்க கணவனைக் கொலை செய்த Bdourம், Jacobம் தற்போது கம்பி எண்ணுகிறார்கள்.

மார்ச் 14ஆம் திகதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers