குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய பெண்ணால் பிரச்சினை!: ஒரு வித்தியாசமான செய்தி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்த ஒரு தாய், ஒரு நாள் தன் குழந்தையை அழைத்துச் செல்ல வரும்போது, அந்த பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

இந்த விடயம் அந்த இரு பெண்கள் மீது ஏற்படுத்திய வெவ்வேறு தாக்கத்தை விவரிக்கிறது இந்த செய்தி.

பசியால் வாடும் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியதற்காக உலகம் முழுவதும் பல பெண்கள் பாராட்டுகள் பெற்ற செய்திகளை நாம் படித்துள்ள நிலையில், இந்த செய்தி சற்று வித்தியாசமாக உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த பெண், தனது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருக்கிறார்.

அவர் குழந்தை மீது காட்டிய பரிவையும் பாசத்தையும் கண்ட அவர், தன் குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு சரியான ஆள் இவர்தான் என்று கூட ஆரம்பத்தில் மகிழ்ந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பால் பவுடரைக் கண்ட அந்த தாதிப்பெண், இதையா குழந்தைக்கு கொடுக்கிறீர்கள் என்று முகம் சுழித்தவாறே கேட்டிருக்கிறார்.

அதை குழந்தையின் தாய் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ஒரு நாள் தனது குழந்தையை அழைத்துச் செல்வதற்காக சற்று முன்னதாகவே அந்த தாதிப்பெண்ணின் வீட்டுக்கு செல்ல, அங்கே அவர் தன் குழந்தைக்கு பாலூட்டுவதைக் கண்டதும், கோபமடைந்து தன் குழந்தையை பிடுங்கிவிட்டு, உனக்கென்ன பைத்தியமா என்று அந்த பெண்ணைப் பார்த்து கத்தியிருக்கிறார்.

தன் குழந்தைக்கு இன்னொரு பெண் பாலூட்டுவதைக் கண்ட இந்த பெண் அப்படி ரியாக்ட் செய்ய, பாலூட்டியவரோ, நான் அந்த குழந்தைக்கு நல்லதுதானே செய்தேன், கெட்ட ரசாயனங்கள் கலந்த பவுடர் பாலைக் கொடுக்காமல் தாய்ப்பால் கொடுத்ததற்கு என்னை அவர் பைத்தியமா என்று திட்டுகிறாரே எனக்கு அவர் நன்றியல்லவா சொல்ல வேண்டும் என்கிறார்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers