பனிப்பொழிவில் 183 பயணிகளுடன் சிக்கிய ரயில்.. 36 மணிநேரத்திற்கு பின் மீட்பு!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் 183 பயணிகளுடன் பனிப்பொழிவில் சிக்கிய ரயில் ஒன்று, 36 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சியாட்டில்-லாஸ் ஏஞ்சல்ஸ் வழித்தடத்தில் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்ட நிலையில், ரயில் பாதையில் மரக்கிளைகள் விழுந்து கிடந்துள்ளன.

இதனைத் தொடந்து, சட்டென ரயில் நின்ற நிலையில் ரயில் எஞ்சின் முற்றிலுமாக பழுதானது. இதனால் பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் வந்த ரயில் எஞ்சின் மற்றும் ரயில்வே ஊழியர்களால், அன்று இரவு முழுவதும் பழுது பார்க்கப்பட்டும் ரயிலை உடனடியாக இயக்க முடியவில்லை. எனினும், ரயில்வே ஊழியர்கள் கடுமையாக போராடியுள்ளனர்.

சுமார் 36 மணிநேரத்திற்கு பிறகு எஞ்சினின் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதனால் நேற்று காலை ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இந்த தடங்களின் போதும் ரயிலில் பயணம் செய்து 183 பயணிகளுக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதால், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Rebekah Dodson

Chris Pietsch/AP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers