மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பெண்: ஆச்சரியப்பட வைக்கும் காரணம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், மாதவிடாய் ரத்தத்ததை முகம் முழுவதும் தடவி அதன் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டிமட்ரா நைக்ஸ் (26) என்கிற பெண், சமீப காலங்களாகவே ரத்தத்துடன் கூடிய ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

வெறுக்கத்தக்க வகையில் இருப்பதாக ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டாலும், பலரும் இந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது இயற்கையான ஒன்று தான் என விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வந்தாலும், இன்று வரை அந்த நேரங்களில் பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம் இருந்துகொண்டே வருகிறது.

டிமட்ரா தன்னுடைய 12 வயதில் பூப்படைந்தவுடன் முதன்முறையாக அவருக்கு மாதவிடாய் நிகழ்ந்துள்ளது. இதனால் வெட்கி தலைகுனிந்து, நண்பர்களிடம் நெருங்கி பழக கூச்சப்பட்டுள்ளார்.

இது தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதில் கவனத்துடன் இருந்து வந்துள்ளார். அதனை தர்மசங்கடமாக நினைத்து வந்த டிமட்ரா, தன்னுடைய 20 வயது முதல் மாற்ற முயற்சித்து மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

நம் சமூகம் மாதவிடாய் ஒரு அழுக்கு, சிரமமானது என நமக்கு கற்பித்துள்ளது. ஆனால் அதுவும் ஒரு இயற்கையான நிகழ்வு தான். நான் இந்த சடங்கின் மூலம் இன்பம் அடைகிறேன். இந்த சமூகம் எப்பொழுது இதுவும் சாதாரணமான ஒன்று என நினைக்கிறதோ, அதுவரை நான் இந்த புகைப்படங்களை மாதம் தோறும் பதிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers