சூறாவளிக்கு சின்னாபின்னமாகும் அமெரிக்கா: இதுவரை 23 பேர் பலி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியுள்ளது.

இதில் 23 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சரிந்துள்ளன என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இம்மாதிரியான நிலையை எதிர் கொண்டது இல்லை என்று அலபாமா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளி ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் வெளிச்சமின்மை காரணமாக தாமதமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் காரணமாக அப்பகுதிகள் சாலை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சூறாவளியில் பலியானவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers