19 வயது குறைவான மகன் வயது இளைஞருடன் பாட்டிக்கு திருமணம்: இது அதையும் தாண்டி புனிதமான காதல்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த 49 வயது பாட்டி ஒருவர் தன்னை விட 19 வயது குறைவான இளைஞரை காதலிப்பதையும் இந்த காதல் மூலம் தனது வாழ்க்கை சிறப்பாக இருப்பதையும் பகிர்ந்துள்ளார்.

Tonya Parker என்ற 49 வயது பெண்மணிக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தை உள்ளது.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 25 வயதான Derek McGarr என்ற இளைஞரை டேட்டிங் தளம் மூலம் சந்தித்துள்ளார்.

முதல் திருமணத்தால் மன அழுத்தத்தில் இருந்த Tonya க்கு, Derek McGarr இன் அனுகுமுறை மிகவும் பிடித்துப்போனது. அதுவும் தன்னைவிட 19 வயது குறைவான நபருடன் பழகுவது புது வித அனுபவத்தை கொடுத்துள்ளது.

5 ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்த இவர்கள் 2017 ஆம் ஆண்டு தங்களது காதலை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக்கொண்டனர்.

இவர்களது உறவுமுறைக்கு குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உறவினை கடைசி வரை தொடர முடியாது கூறிவந்த நிலையில், அனைவரது எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

எங்கள் இருவருக்குள்ளும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டு அவ்வப்போது பிரிந்து வாழ்ந்தோம். ஆனால் தொடர்ச்சியாக பிரிந்து வாழ இயலாத காரணத்தால் மீண்டும் இணைந்துகொண்டோம்.

இந்த ஆண்டின் இறுதியில் எங்கள் இருவருக்குள்ளும் திருமணம் நடக்கவிருக்கிறது என கூறியுள்ளார். உடல் மற்றும் மனரீதியாக எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கிறது, உலகத்திற்கு இதனை ஒருபோதும் விளக்கமுடியாது, எங்கள் இருவரின் மனது இதனை ஏற்றுக்கொண்டால் போதுமானது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்