வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படும்! டிரம்ப் எச்சரிக்கை

Report Print Kabilan in அமெரிக்கா

வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா மற்றும் துருக்கியின் பெயரை நீக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு பதிலடியாக உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

மேலும், இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க நேரிடும் என்றும், இந்தியாவுக்கான வர்த்தக சலுகைகளை திரும்பப் பெறப் போவதாகவும், வரிச்சலுகை வழங்காவிட்டால் நடவடிக்கை பாயும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலால் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் இருந்து இந்தியாவையும், துருக்கியையும் நீக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனினும், இந்த அறிவிப்பால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று இந்திய வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வாதவான் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்