தமிழனை கவுரவிக்க வெளிநாட்டில் கோடிக்கணக்கில் அள்ளி கொடுத்த தம்பதி! நெகிழ வைக்கும் காரணம்

Report Print Santhan in அமெரிக்கா

தமிழரான கணித மேதை ராமானுஜத்தை கவுரவிக்க அமெரிக்க பல்கலைகழகத்திற்கு இந்திய வம்சாவளி தம்பதியினர் 1 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

காலத்தை வென்ற கணித மேதை என போற்றப்படுபவர் ஸ்ரீனிவாச ராமானுஜன். தமிழகத்தின் ஈரோட்டில் பிறந்த இவரின் புகழ் இப்போது உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

இதனால் அவர் பிறந்த தினமான டிசம்பர் 22-ஆம் திகதி கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ராமானுஜத்தை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க இந்திய வம்சாவளி தம்பதி 1 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 18,05,25,000 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கி உள்ளது.

ஓய்வுபெற்ற கணித பேராசிரியரான வரதன் அவரது மனைவி வேதா ஆகிய இருவரும் இணைந்து இந்த தொகையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ராமானுஜன் பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்