சிறார் பாலியல் துஸ்பிரயோகம் எதிரொலி: 2 பில்லியன் டொலர் சொத்தை இழக்கும் மைக்கேல் ஜாக்சன்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

சமீபத்தில் வெளியாகி உலகெங்கிலும் உள்ள மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களை உலுக்கிய Leaving Neverland ஆவணப்படத்தால் ஜாக்சனின் 2 பில்லியன் டொலர் சொத்து கைவிட்டுப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மறைந்த பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்று சமீபத்தில் Leaving Neverland என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

அதில், மைக்கேல் ஜாக்சனின் சிறார்கள் மீதான ஈர்ப்பு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில், பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

குறித்த ஆவணப்படமானது உலகெங்கிலும் உள்ள ஜாக்சன் ரசிகர்களை உலுக்கியதுடன், பிரித்தானியா, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் முக்கிய வானொலிகளில் அவரது பாடல்கள் ஒலிபரப்ப தடை கோரியும் போராட்டம் வலுத்தது.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்று அவரது மறைவுக்கு பிறகு சுமார் 2 பில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டித்தந்தது.

மட்டுமின்றி அவரது பாடல்களை வெளியிடுவதற்கான உரிமையை சோனி நிறுவனம் சுமார் 287 மில்லியன் டொலருக்கு கைப்பற்றியது.

தற்போது மைக்கேல் ஜாக்சனுக்கு எதிராக சிறார் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளதால்,

இந்த 2 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் இழப்பீடாக வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கருத்து வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு ஜாக்சனின் குடும்பத்தினர் மற்றும் சட்ட ஆலோசகர்கள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்