பெண்ணாக பிறந்து ஆணாக மாறி குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய நபர்! எப்படி தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிறப்பால் ஆணாக பிறந்து, பின் மன அளவில் தங்களை பெண்ணாக உணர்ந்து அதற்கான அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு பெண்ணாக மாறுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். அதே போன்று பிறப்பில் பெண்பாலாகவும், மன அளவில் ஆண்பாலாகவும் அறியப்படுவர்கள் திருநம்பிகள் என்று கூறப்படுகின்றனர்.

பொதுவாக திருநங்கைகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது மருத்துவ உலகில் இதுவரை இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த வைலே சிம்ப்சன் என்ற இவர் பிறப்பால் பெண்ணாக பிறந்த மனதளவில் தன்னை ஆணாக உணர்ந்தார்.

இதனால் தன்னுடைய 21 வயதில் ஆணாக மாறினார். அதன் பின் இவர் ஸ்டீபன் கேத் என்பவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிம்ப்சன், தான் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்துள்ளார். சிம்ப்சனுக்கு மாதவிடாய் நின்றிருந்ததால், அவர் கர்ப்பம் அடைய வாய்ப்பே இல்லை என்ற மருத்தவர்கள் கூறிய நிலையில் அவர் கர்ப்பம் அடைந்தது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முகத்தில் தாடி, மீசையுடனும் வயிற்றில் குழந்தையுடனும் சென்ற அவரை தெருவில் பலரும் பார்த்து நக்கல் செய்தனர்.

ஆனால் அவர் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன் அவருக்கு சிசேரியன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால் இந்த செய்தி தற்போது தான் தெரியவந்துள்ளது. அதில் அவர், தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிப்பதாக கூறியுள்ளார். அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் சிம்ப்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்