அகதிகளுடன் அமெரிக்காவில் நுழைய முயன்ற லொறி விபத்தில் சிக்கியதில் 23 பேர் பலி: 31 பேர் காயம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

மத்திய அமெரிக்க குடியேறியளுடன் அமெரிக்காவிற்கும் நுழைய முயன்ற லொறி விபத்தில் சிக்கியதில் 23 பேர் பலியாகியுள்ளதோடு, 31 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் இக்ஸ்பாபா மற்றும் சோயாலோ நகரங்களை இணைக்கும் ஒரு சாலையில் அகதிகளுடன் சென்ற லொறி விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் இளம்பெண் உட்பட இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மெக்ஸிக்கோ-குவாடமாலா எல்லைக்கு வடக்கே 155 மைல்கள் தொலைவில் இந்த விபத்து நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்