ஒரே நாளில் 30 முறை லாட்டரியில் பரிசை அள்ளிய அதிர்ஷ்டசாலி பெண்: மொத்த தொகை எவ்வளவு?

Report Print Raju Raju in அமெரிக்கா

ஒரே நாளில் பெண் வாங்கிய 30 லாட்டரி சீட்டுக்கும் பரிசு விழுந்த நிலையில் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் டெபோரா பிரவுன்.

இவர் சில வாரங்களுக்கு முன்னர் கடைக்கு சென்று ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் அவருக்கு $5,000 பரிசு விழுந்தது.

இதையடுத்து மேலும் 4 சீட்டுகள் வாங்கினார். அதிலும் கணிசமான தொகை பிரவுனுக்கு பரிசாக கிடைத்தது.

இப்படி ஒரே நாளில் 30 முறை லாட்டரி சீட்டுகளை பிரவுன் வாங்கிய நிலையில் அனைத்துக்குமே பரிசு விழுந்தது.

அதாவது மொத்தமாக அவருக்கு $150,000 பரிசு விழுந்தது. இதன்மூலம் ஒரே நாளில் பிரவுன் கோடீஸ்வரியாகியுள்ளார்.

இது குறித்து பிரவுன் கூறுகையில், எனக்கு மகிழ்ச்சியில் இதயமே நின்றுவிடும் போல உள்ளது.

இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை.

ஆனால் என் வீட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கு இந்த பணத்திலிருந்து எடுத்து செலவு செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers