ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகள்... பிழைப்புக்காக செய்த தொழில்: மனம் திறக்கும் முன்னாள் மொடல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்த ஆபாச பட நடிகை ஒருவர் தமது வாழ்க்கையில் தாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் தற்போது அருவருப்பை தருகிறது என தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியை சேர்ந்தவர் தற்போது 43 வயதாகும் நடாலி சுலேமான். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறப்பு அருவைசிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்தார்.

ஏற்கெனவே இவருக்கு 6 பிள்ளைகள் இருந்தன. தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தமது வாழ்க்கையில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அருவருப்பானவை என குறிப்பிட்டுள்ளார்.

கிளாமர் மொடலாக பணியாற்றி வந்த நடாலி சுலேமான், தமக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி ஆபாச திரைப்படத் துறையில் நடிகையானார்.

அதன் பின்னர், பிழைப்புக்காக இரவு விடுதிகளில் ஆபாச நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தமது 14 பிள்ளைகளுக்கு ஒருவேளையேனும் உணவு தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாம் ஆபாச விடுதிகளில் பணியாற்றியதாக கூறும் நடாலி,

இளைமை காலத்தில் என்ன முடிவெடுக்கிறோம் என தெரியாமல், வாழ்க்கையில் பல அருவருப்பான நிகழ்வுகள் அரங்கேறியது என குறிப்பிட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் போதைமருந்துக்கு அடிமையானதாக கூறும் அவர், இந்த காலகட்டத்திலேயே உலகம் உற்றுநோக்கிய சோதனை முயற்சிக்கு அவர் தம்மை உட்படுத்தினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு சிறப்பு அறுவைசிகிச்சை மூலம் மொத்தம் 12 கருவை தமக்குள் பொருத்திக்கொண்டார். இது அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் முக்கிய மருத்துவராக செயல்பட்ட Michael Kamrava என்பவரின் அமெரிக்க மருத்துவ உரிமத்தை அந்த நாட்டு அரசு ரத்து செய்தது.

மேலும் 8 பிள்ளைகளை பெற்றெடுக்கும் அந்த அபூர்வ நிமிடத்திற்கு மொத்தம் 46 மருத்துவர்கள் உதவி செய்துள்ளனர்.

சமீபத்தில் பேசிய நடாலி, தமது 14 பிள்ளைகளுக்காக இனிமேல் தமது வாழ்நாளை செலவிட இருப்பதாகவும், அவர்களை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers