நியூஸிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு நீங்கள்தான் காரணம்: பிரபலத்தின் மகளை வாட்டி எடுத்த இஸ்லாமிய மாணவிகள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களுக்காக நியூயார்க் பல்கலக்கழகத்தில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்ஷியா கிளிண்டன், எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளானார்.

இஸ்லாமிய மாணவிகளின் பச்சாதாபத்தைப் பெற முயன்ற செல்ஷியாவை, மாணவிகள் நேருக்கு நேர் கை நீட்டி நீங்கள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என கடுங்கோபத்துடன் வாட்டி எடுத்தனர்.

மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்ஷியாவை நோக்கி கை நீட்டி பேசும் Leen Dweik என்ற மாணவி, இங்கே, இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நிகழ்வு, உங்களைப் போன்றவர்களாலும், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளாலும் தூண்டப்பட்ட படுகொலையின் விளைவு என்றார்.

நீங்கள் தூண்டியதால் 49 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அதை உங்கள் மனதில் ஆழமாக உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் Dweik.

Dweik செல்ஷியாவை நோக்கி கை நீட்டி இதைக் கூறும்போது, மற்ற மாணவிகள் அதை ஆதரிக்கும் விதமாக தங்கள் விரல்களால் சொடுக்குப் போட்டு சத்தம் எழுப்பினர்.

இப்படி காரசாரமான வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல், செல்ஷியா, நீங்கள் அப்படி உணர்ந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று கூற, அவரது வார்த்தைகள் மாணவர்களை இன்னும் ஆத்திரமூட்ட, ஒரு மாணவர் நீங்கள் கூறியதன் பொருள் என்ன? என்று சத்தமிட்டார்.

மின்னசோட்டா பிரதிநிதியான Ilhan Omar, கடந்த மாதம் இஸ்ரேலை விமர்சிக்கும் போது யூதர்களுக்கெதிரான வெறுப்பைக் காட்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது பலர் Ilhan Omarஐ கடுமையாக விமர்சிக்க, செல்ஷியாவும், பொது வாழ்வில் ஈடுபடும் அனைவரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அலுவலர்களும், கட்சி பாகுபாடின்றி, யூத வெறுப்பை வளர்க்கக்கூடாது’ என ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Ilhan Omarஐ செல்ஷியா விமர்சித்தாலேயே இந்த இஸ்லாமிய மாணவர்கள் அவர் மீது சொற்போர் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்