ஜான்சன் பவுடரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2.9 கோடி டொலர் இழப்பீடு: நீதிமன்றம் அதிரடி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

குழந்தைகள் முதல் பெரியவர்கன் வரை அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்தப்பட்ட ஜான்சன் பேபி பவுடர் மற்றும் ஜான்சன் பவுடரால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு அது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டு அது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை பயன்படுத்தும் பெண்கள் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அந்த பவுரிடரில் கலக்கப்படும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்தான் என ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனை ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்தாலும், ஆய்வக சோதனையில் அது உறுதிசெய்யப்பட்டதையடுத்து கலிபோர்னியாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அப்பெண் தொடர்ந்த வழக்கு விசாரணயில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 2.9 கோடி டொலர் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை அந்தரங்க பகுதியில் தொடர்ந்து பயன்படுத்திய பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 470 கோடி டொலர் வழங்க ஜான்சன் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்