வெறும் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியப் பட வைத்த பெண்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒன்பது நிமிடத்தில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் Houston பகுதியைச் சேர்ந்தவர் Thelma Chiaka. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் டெக்சாசில் இருக்கும் The Woman’s மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை காலை இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.50 மணியிலிருந்து 4.59 மணி அதாவது 9 நிமிடத்தில் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில் இரண்டு இரட்டை ஆண் குழந்தையும், ஒரு இரட்டை பெண் குழந்தையும் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிறந்த குழந்தைகள் 793 கிராம் முதல் 1.3 கிலோ கிராம் வரை எடையை கொண்டுள்ளன.

இந்த 6 குழந்தைகளும் இப்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாயும் குழந்தைகளும் நலமுடம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அதிசயமான பிரசவம் 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நிகழும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 1968-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரிமிங்காம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் முதல் முறையாக 6 குழந்தைகள் பெற்றிருந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்