குளிர்கால அறைக்குள் படையெடுத்த விஷப்பாம்புகள்! பதறிய நபர் செய்யும் காரியம்.... புல்லரிக்க வைக்கும் வீடியோ

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் நபர் ஒருவரின் குளிர்கால வீட்டுக்குள் இருந்து 45 விஷப்பாம்புகள் அகற்றப்பட்டுள்ள வீடியோவை பாம்புகளை அகற்றும் நபர் வெளியிட்டுள்ளது புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nathan Hawkins என்பவர் பாம்புகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவர், குறித்த நபரின் குளிர்கால வீட்டுக்குள் சுமார் 6 அங்குல நீளம் கொண்ட 45 விஷப்பாம்புகள் வந்து படுத்திருந்துள்ளது.

இவை நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்ததாக கருதப்படுகிறது. இந்த பாம்புகளை பார்த்த Nathan Hawkins வீட்டு உரிமையாளரின் உதவியுடன் அந்த பாம்புகளை வெளியேற்றியுள்ளார்.

இதனை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட அவர், நாட் கட்டிய வீடு அழகாக இருக்கிறது என்று பார்ப்பதை தவிர்த்து நாம் பயன்படுத்தும் காரில் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் அதன் வழியாகவும் பாம்புகள் வீட்டுக்குள் வந்து விடுகின்றன.

ஜன்னல் வழியாகவும், வீட்டில் இருக்கும் ஓட்டைகள் வழியாகவும் பாம்புகள் வீட்டுக்குள் எளிதில் நுழைந்துவிடுகின்றன. அருகில் உள்ள செடிகொடிகளை அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளுங்கள் என அறிவுறுத்திய அவர், தற்போது அகற்றப்பட்ட பாம்புகள் வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள என அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்