அமெரிக்காவின் முக்கிய மாகாணத்தை மிரட்டும் வெள்ளம்! நகரங்களுக்குள் புகும் அபாயம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கு நகரங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கான்சாஸ் மாகாணத்தில் திடீரென வீசிய புயலால், மிசௌரி ஆறு அபாய அளவைக் கடந்து பாய்கிறது. இதனால் மிரட்டும் வகையிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அச்சுசல், வௌன்வோட் ஆகிய நகரங்களுக்குள் புகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் அந்த இரு நகரங்களை அடுத்துள்ள கான்சாஸ் நகரிலும் வெள்ளம் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்று நகரங்களிலும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கை விமானம் மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என கருதப்படுவதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

Reuters

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers