டிரம்ப் ஜனாதிபதி ஆவதற்கு ரஷ்யா உதவவில்லை! விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்பின் பிரச்சாரத்திற்கு ரஷ்யா உதவி செய்யவில்லை என்று சிறப்பு விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவியதாக கூறப்பட்டது.

இவ்வாறு எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு(FBI) இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணையை நடத்தி வந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக முன்னாள் FBI இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் 22 மாதங்களாக நடந்து வந்த விசாரணை தற்போது முடிந்துள்ளது. அதன் அறிக்கை அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரஷிய எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முழு விபரம், பாராளுமன்ற தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு பின்னர் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

எனினும், டிரம்பின் பிரச்சாரத்திற்கு உதவ ரஷ்யர்கள் பலர் முன் வந்தபோதும், சதி நடந்திருப்பதற்கான ஆதாரத்தை முல்லர் கண்டறியவில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், பல ரஷ்யர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கனவே குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers