திடீரென மர்மநபர் துப்பாக்கிச்சூடு... இருவர் பலி... மார்பில் குண்டடிப்பட்டும் பலரின் உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோ

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த நிலையில், குண்டடிப்பட்ட பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியாக பேருந்தை ஓட்டியதால் பலர் உயிர் பிழைத்துள்ளனர்.

அமெரிக்காவின் Seattle நகரில் மர்மநபர் ஒருவர் திடீரென சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டான்.

பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான்.

இதில் மார்பில் குண்டடிப்பட்ட பேருந்து ஓட்டுனர், அந்த வலியையும் பொறுத்து கொண்டு பேருந்தை பாதுகாப்பான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.

இதனால் பேருந்தில் இருந்த 12 பயணிகள் எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தனர்.

இதன்பின்னர் வேறு வாகனத்தின் ஓட்டுனரை அவன் சுட்டு கொன்றான், இதையடுத்து காரில் வந்த ஒரு நபரை சுட்டு கொன்றதுடன் காரை திருடி கொண்டு தப்பிக்க முயன்றுள்ளான்.

இந்நிலையில் பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், காயம் பட்ட பேருந்து ஓட்டுனர் உட்பட இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதோடு கைது செய்யப்பட்ட நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவனும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டான்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நோக்கம் என்ன என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்