உலகில் சவாலான நோய்களில் ஒன்றான எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி தனது சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.
அட்லான்டாவைச் சேர்ந்த 35 வயது நினா மார்ட்டினெஸ் என்ற பெண்மணி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டபவர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்க்கு ஆன்டி- ரெட்ரோவைரல் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தன்னை போன்று எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார். இது மருத்துவ உலகில் முதல்முறையாக நடந்துள்ளது என மருத்துவர் டாரி செஜெவ் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு பேரும் நலமாக இருக்கிறார்கள் என்றும் இதன் மூலம் எய்ட்ஸ் நோய் மீது மக்கள் வைத்திருந்த தவறான பார்வை குறையும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிறுநீரகத்தை தானமாக பெற்றவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.