தனது திருமண புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடிய பெண்... காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தனது கணவருடன் விவாகரத்து கிடைத்த நிலையில் அதை வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார்.

மேரி லொலிஸ் என்ற பெண்ணுக்கு குயிண்டன் ஈடன் என்ற நபருடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஈடனுடன் மேரிக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற மேரி அதை வித்தியாசமான முறையில் கொண்டாடி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

அதாவது ஈடனுடன் இருக்கும் திருமண ஆல்பங்களை தன்னுடைய ஷூ கால்களால் உதைப்பது, திருமண போட்டோக்கள் அனைத்தையும் தீயிட்டு எரிப்பது என செய்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி லைக்குகளை குவித்து வருவதோடு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மேரி கூறுகையில், பெண்கள் வலுவானவர்கள் என்பதை உணர்த்தவே இந்த வித்தியாசமான போட்டோ ஷூட்டை நடத்தினேன்.

எப்படியோ விவாகரத்து பெற்றுவிட்டேன், எனது முன்னாள் கணவர் ஈடன் நல்ல மனிதராக தான் இருந்தார், ஆனால் போதை பழக்கம் அவரை மாற்றிவிட்டது.

இது சம்மந்தமாக சிறைக்கு கூட அவர் பலமுறை சென்றுள்ளார், தற்போது கூட ஈடன் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

எனக்கு புதிதாக ஒரு வாழ்க்கை துணை கிடைத்துள்ளார், அவர் மிக நல்ல மனிதர்.

என்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து பல பெண்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள்.

அதாவது, பிடிக்காத நபருடன் வாழ்வதை விட அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது என என்னை பார்த்து கற்றுகொண்டதாக கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்